24 மணிநேரத்தில் நடந்த எலிமினேஷன்; உடைந்து அழுத சாச்சனா! நெஞ்சை உருக வைத்த வீடியோ

By manimegalai a  |  First Published Oct 7, 2024, 4:45 PM IST

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டுக்குள் 2-ஆவது போட்டியாளராக நுழைந்து, முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார் சாச்சனா நேமிதாஸ். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 


பிக்பாஸ் சீசன் 8, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் யூகத்தின் அடிப்படையில் வெளியான போதில் இருந்தே, அதில் சாச்சனாவின்பெயர்  இடம்பெற்றிருந்தது. சாச்சனா பிக்பாஸ் தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக வெளியான, 'மகாராஜா' படத்தில் நடித்திருந்தார். எனவே சாச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் சேதுபதி சிபாரிசு செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

மேலும் ரசிகர்கள் எதிரிபார்த்தது போலவே பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்தார். சாச்சனாவை பார்த்ததும், அவரை தன்னுடைய மகள் போலவே பாவித்து விஜய் சேதுபதி பேசிய நிலையில், உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி... தைரியமாக விளையாட வேண்டும் என அட்வைஸ் கொடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் இவர் தான் மிகவும் குறைந்த வயதுடைய போட்டியாளராகவும் இருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

நேற்றைய தினம் நிகழ்ச்சியின் முடிவில், 24 மணிநேரத்தில் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது உறுதி என, விஜய் சேதுபதி அறிவித்ததை தொடர்ந்து... இன்று அதற்கான நாமினேஷன் பாடலாம் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் மாறி மாறி... சில பிரபலங்களின் பெயர்களை கூறி வந்தனர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு சாச்சனா வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கனவோடு வந்து.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

நாமினேஷனில் அதிக ஓட்டுக்களை பெற்ற சாச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் என பிக்பாஸ் கூறிய உடன் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு... தனக்கு விஜய் சேதுபதி கொடுத்த டம்மி ட்ராஃபியை உடைத்து விட்டு கண்ணீர் விட்டு அழுவது பார்க்கும் போது ரசிகர்கள் மனது உருகி விட்டது.

click me!