Ajith Outing With Shalini :நடிகர் அஜித்குமார் தன்னுடைய மனைவி ஷாலினி உடன் சாலையில் வாக்கிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படம் விடாமுயற்சி. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் விடாமுயற்சி படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இதுதவிர அஜித் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் பிரசன்னாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... முதல் நாளே எலிமினேஷன்; வந்த வேகத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் யார்?
இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது ஸ்பெயினில் நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தோடு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஷூட்டிங் தவிர ஓய்வு நேரங்களில் ஜாலியாக பேமிலியோடு அவுட்டிங் சென்று வருகிறார் அஜித். அஜித்தின் மகன் ஆத்விக் தீவிர கால்பந்து விளையாட்டு ரசிகர் என்பதால், ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை ஷாலினியுடன் சென்று கண்டுகளித்துள்ளார் ஆத்விக்.
நடிகர், நடிகைகள் பெரிதும் விரும்புவது சாதாரண மனிதர்கள் போல் சாலையில் ஜாலியாக செல்வது தான். ஆனால் தமிழ்நாட்டில் அது அவர்களுக்கு சாத்தியமில்லாதது என்பதால், வெளிநாட்டிற்கு சென்று அங்கு ஜாலியாக சாலையில் உலா வர விரும்புவார்கள். அந்த வகையில் நடிகர் அஜித்தும் தன்னுடைய மனைவி ஷாலினி உடன் ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Ajith Sir & Shalini Mam Latest Video ❤️ pic.twitter.com/EnD78ZHJsJ
— MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml)இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் ஹவுஸ்புல் ஆனதால் இந்தி பிக்பாஸுக்கு சென்ற விஜய் டிவி பிரபலம் - யார் தெரியுமா?