Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முதல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான ரவீந்திரன் சந்திரசேகர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கோலாகலமாக துவங்கி இருக்கிறது. இதுவரை கடந்த ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், முதல் முறையாக இந்த எட்டாவது சீசனை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனின் முதல் போட்டியாளராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சினிமா விமர்சகருமான ரவீந்திரன் சந்திரசேகர் இணைந்திருக்கிறார்.
தமிழில் வெளியான "சுட்ட கதை", "நலனும் நந்தினியும்" மற்றும் "முருங்கைக்காய் சிப்ஸ்" போன்ற திரைப்படங்களை பிறரோடு இணைந்து தயாரித்து வழங்கியவர் ரவீந்திரன் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய YouTube சேனல் மூலமாகவும் இவர் ஒரு சினிமா விமர்சகராக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருகிறார்.
இதைவிட ஹைலைட் என்னவென்றால் கடந்த ஏழு சீசன்களாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து பல சர்ச்சைகளை சந்தித்தவர் ரவீந்திரன் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில், அவரை பங்கமாய் கலாய்த்து உள்ளே அனுப்பி வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வீட்டுக்குள் சென்ற ரவீந்திரன் சந்திரசேகரன் முதல் முறையாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் ஏற்புடைய முதல் போட்டியாளர் நான் தான் என்று கூறியுள்ளார். ஏனென்றால் "என்னால் தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" என்று கூறி தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
"கேஸ் முடியட்டும்; அப்புறம் பார்க்கலாம்" ஜானி மாஸ்டரின் தேசிய விருதுக்கு விதிக்கப்பட்ட தடை!