
பட்டப்படிப்பை முடித்த பிறகு வெளிநாட்டிற்கு சென்று வங்கித் துறையில் பணியாற்றி வந்த நபர் தான் அர்ஜுன் தாஸ். திடீரென சினிமாவின் மீது ஏற்பட்ட காதலின் காரணமாக தன்னுடைய உடல் எடையை பெரிய அளவில் குறைத்து விட்டு, சினிமாவுக்கு என்று சிறப்பாக தயாராகி சென்னை வந்து அதற்கான சரியான வாய்ப்பை தேடி தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார் அவர். இந்த சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "பெருமான்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் அறிமுகமானார் அர்ஜுன் தாஸ். அதன்பிறகு சில குறும்படங்களிலும், ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வந்த அர்ஜுன் தாசுக்கு, அதன்பிறகு தமிழில் ஒரு மிகப்பெரிய பிரேக்கிங் பாயிண்ட் கிடைத்தது.
அது தான் கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம். கைதி திரைப்படத்தில் "அன்பு" என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை அவர் பெற்றார். உண்மையில் இன்றளவும் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் தான் அர்ஜுன் டாஸை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றது என்றால் அது சற்றும் மிகையல்ல.
33 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி - டிசம்பரில் வரும் "தலைவர் 173" அப்டேட்?
கைதி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் "அந்தகாரம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாசுக்கு, மீண்டும் "மாஸ்டர்" மற்றும் "விக்ரம்" போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை அளித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். நிச்சயம் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக கைதி 2 திரைப்படத்திலும் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே அர்ஜுன் தாஸ் நடிப்பில் நல்ல பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதுவும் ஒரு ஹீரோவாக "அநீதி", "ரசவாதி" போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பல திரைப்படங்களில் அர்ஜுன் தாஸ் தோன்றிய நிலையில், தற்பொழுது முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக, காதல் ரசம் ததும்பும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவர். பிரபல நடிகை அதிதி சங்கர் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் "ஒன்ஸ் மோர்". தளபதி விஜயின் சூப்பர் ஹிட் பட டைட்டில் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இயல்பாக ஆக்ஷன் கதாபாத்திரமாக இல்லாமல், மெல்லிய காதல் கதை ஒன்றி நடித்திருப்பதாக அவரே ஒரு பதிவில் கூறியுள்ளார்.
தளபதி போட்ட உத்தரவு.. புஸ்ஸி ஆனந்திடம் ஆசி பெற்று.. த.வெ.க-வில் இணைந்தார் தாடி பாலாஜி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.