பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி! வெளியானது புதிய ப்ரோமோ!

By manimegalai a  |  First Published Oct 5, 2024, 4:29 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாளை துவங்க உள்ள நிலையில், புதிய ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
 


விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் துவங்க உள்ளது. ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்ட நிலையில், உலக நாயகன் கமல் ஹாசன் திடீர் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால், இந்த முறை பிக்பாஸ் துவங்குவதில்  சிறு தாமதம் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 7 சீசனாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும்... இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். நாளை துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்கிக்கான ஷூட்டிங் இன்று காலை துவங்கிய நிலையில், இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, தற்போது வெளியான தகவலின் படி , " தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர்  ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாத், தீபக், பாடகர் பால் டப்பா, கோகுல்நாத், வி.ஜே. விஷால், சந்தோஷ் பிரதாப், ஜாக்குலின்,  பவித்ரா ஜனனி, சஞ்சனா,  சுனிதா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, ஷாலின் சோயா, சௌந்தர்யா நஞ்சுண்டன், ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் நாளை தான் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் பற்றிய முழு விவரம் தெரிய வரும். போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புவதற்கு முன்பு.. தொகுப்பாளர் பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்டுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களுக்கு பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்ட விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டின் உள்ளே என்ட்ரி கொடுத்துள்ளார். வீட்டுக்குள் இருந்தபடி விஜய் சேதுபதி பேசும் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. 

 

இன்னைக்கு இல்ல நாளைக்கு..😎 of Bigg Boss Tamil Season 8 - அக்டோபர் 6 முதல் மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. ❤️‍🔥 ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥 😍… pic.twitter.com/7c5zaZUyba

— Vijay Television (@vijaytelevision)

 

click me!