ஹண்டர் வந்துட்டார்; ரஜினிகாந்தின் அதகளமான வேட்டையன் டிரைலர் இதோ

By Ganesh A  |  First Published Oct 2, 2024, 5:16 PM IST

Vettaiyan Movie Official Trailer : த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.


ரஜினிகாந்தின் 170வது படம் வேட்டையன். இப்படத்த த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். அவர் ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

மேலும் வேட்டையன் படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்தமாதம் வெளியிடப்பட்ட வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... ஒரு படம் கூட ஹிட் கொடுக்காத நாயகியை ‘தளபதி 69’ல் விஜய்க்கு ஜோடியாக்கிய எச்.வினோத்!!

அப்பாடலுக்கு மஞ்சு வாரியர் ஆடிய நடன அசைவுகள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆக்கிரமித்து உள்ளது. வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வேட்டையன் உருவாகி உள்ளதால் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. வேட்டையன் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ஆடியோ லாஞ்சில் இயக்குனர் த.செ.ஞானவேல் சொன்னதுபோல் இப்படத்தில் ரஜினியை வித்தியாசமான பரிணாமத்தில் காட்டி இருக்கின்றார். அதிரடி சண்டைக் காட்சிகளும், அதகளமான வசனங்களுடனும் கூடிய இந்த வேட்டையன் பட டிரைலரை பார்த்த ரசிகர்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை டிரைலர் அதிகரித்துள்ளதாக கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் சக்கைப்போடு போடும் ‘லப்பர் பந்து’; அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ்?

click me!