Venkatesh Bhat : பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.
தமிழக சின்னத்திரை வரலாற்றில், பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். உண்மையில் கொரோனா காலகட்டத்தில் பலரின் பொழுதுபோக்காகவே மாறியது என்றால் அது மிகையல்ல. இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றே கூறலாம். அதே நேரம் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் குக் வித் கோமாளி மிகப்பெரிய ஒரு பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
குறிப்பாக நடிகர் புகழ், நடிகை சிவாங்கி மற்றும் நடிகை பிளெஸ்ஸி போன்றவர்களுக்கு அவர்களின் திரை வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதே போல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் டெரர் நடுவராக அறிமுகமாகி, இன்று தமிழ் மக்கள் அனைவரும் "பட்டு குட்டி" என்று செல்லமா அழைக்கும் அளவிற்கு பலரது மனதில் குடியேறியுள்ளார் வெங்கடேஷ் பட். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்பு மிகப்பெரிய சமையல் கலைஞராக பணியாற்றியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பின்வாங்கிய கங்குவா.. ஆனா வேட்டையனோடு ரேஸில் இறங்கும் டாப் தமிழ் நடிகர் - வெளியான புது அப்டேட்!
கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியோடு பயணித்து வந்த வெங்கடேஷ், திடீரென அங்கிருந்து விலகி, "டூப் குக் டாப் குக்" என்ற நிகழ்ச்சியின் மூலம் சன் டிவிக்கு குடிபெயர்ந்தார். வழக்கம் போல அவருடைய இந்த இடமாற்றத்திற்கு பல கருத்துக்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால், தன்னை மீடியா உலகில் அறிமுகம் செய்த மீடியா மேசன் நிறுவனம், விஜய் டிவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியதால், தானும் அவர்களோடு சேர்ந்து அங்கிருந்து வெளியேறியதாகவும். விஜய் டிவியில் கிடைத்ததை விட இங்கு சம்பளம் குறைவு என்றாலும், என்னுடைய விசுவாசத்திற்காக மட்டுமே மீடியா மேசனோடு தான் சன் டிவிக்கு வந்ததாகவும் தெளிவாக பல இடங்களில் விலக்கியிருந்தார் வெங்கி.
இந்த சூழலில் தான் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட ஒரு வீடியோவில், வெங்கட் பட் கோடிக்கணக்கில் அதிக சம்பளம் கேட்டதால் கடுப்பான விஜய் டிவி அவரை நீக்கிவிட்டது. அதனால் மட்டுமே அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவிக்கு போனார் என்று பேசியுள்ளார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவின் கம்மெண்ட் செக்ஷனில் குவிந்த வெங்கட்டின் ரசிகர்கள் அவரை வறுத்தெடுக்க, இப்பொது அதற்காக ஒரு வீடியோ வெளியிட்டு, அவர் பேசிட்டு போகட்டும் விடுங்க.. இது பொதுவாழ்க்கையில் சகஜம். அவர் காசுக்காக பேசுறாரா? இல்ல மன நிலை பாதிக்கப்பட்டு பேசுறாரா என்று தெரியவில்லை என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
"40 நாளுக்கு முன்பே சொன்ன ரஜினி.. அவரைவிட எனக்கு படம் முக்கியமில்ல" - வருத்தப்பட்ட லோகேஷ்!