Actor Sathya Kumar : பிரபல சின்னத்திரை நடிகர் சத்யா குமார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் 4வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தவர் தான் N.S கிருஷ்ணன். தமிழ் திரையுலகில் கொடிகட்டி பரந்த குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். அவருடைய பேத்தி தான் பிரபல பாடகி ரம்யா என்.எஸ்.கே. தமிழ் திரை உலகில் சவாலான பல பாடல்களை பாடி புகழ்பெற்ற பாடகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இவருடைய கணவர் சத்யா குமாரும் சின்னத்திரை நாடகங்களில் இப்போது வில்லன் கதாபாத்திரம் ஏற்று வருகிறார். குறிப்பாக கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது டீச்சராக நடித்து அசத்தி வருகின்றார். இது தவிர சின்னத்திரையில் ஒளிபரப்பான வேறு சில நாடகங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிப்பை தாண்டி உடற்பயிற்சி செய்வதிலும் பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் சத்யா குமார்.
தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளராக அவர் களமிறங்கி இருக்கிறார். அவரை அன்போடு வரவேற்ற விஜய் சேதுபதி, இதற்கு முன்பு உள்ளே சென்ற மூன்று போட்டியாளர்களுக்கு அளித்ததை போல, வெற்றிக்கோப்பை ஒன்றை அளித்து, வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார். சத்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.