பாலிவுட் நடிகை ரேகாவின் லிவ்-இன் ரிலேசன்? யார் அந்த நபர்?

By Dhanalakshmi G  |  First Published Oct 7, 2024, 11:38 AM IST

பல ஆண்டுகளாக தனது அழகினாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கிறங்க வைத்து வரும் ரேகா, இந்த வயதிலும் நடனம் ஆடி அசத்தி வருகிறார். தற்போது ஒருவருடன் லின் இன் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Tamil Cinema News: பல தஆண்டுகளாக தனது அழகு மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்து இருப்பவர் நடிகை ரேகா. பேஷன் மாடல் என்றே இவரை அழைக்கலாம். ரேகா அக்டோபர் 10, 1954 இல் பிறந்தார். ரேகாவின் இயற்பெயர் பானுரேகா கணேசன். ஆனால் ரேகா என்ற பெயரில்தான் அடையாளம் காணப்பட்டார். ரேகா தனது நான்காவது வயதில் குழந்தை நட்சத்திரமாக உருவெடுத்தார். ரேகாவுக்கு நடனம் மற்றும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவர் விமான பணிப்பெண்ணாக விரும்பினார், ஆனால் அவரது தாயாரின் விருப்பத்தின்படி, 14 வயதில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். தந்தையும் ஜெமினி கணேசனும் தமிழில் பிரபல நடிகராக இருந்தார். ஆனால், சினிமா வாழ்க்கையில் ரேகா அதிகமாக போராட வேண்டியிருந்தது.

Tap to resize

Latest Videos

ரேகாவுக்கு சினிமா பயணம்: 

ரேகாவின் திரைப்பயணம் சொகுசாக அமையவில்லை. தென்னிந்திய திரையுலகில் தலைகாட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். அந்த நேரத்தில்தான் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குல்ஜித் பாலின் பார்வை ரேகா மீது விழுந்தது. ரேகாவின் அழகு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் தனது படமான 'தோ ஷிகாரி' -யில் ரேகாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் ரேகா மும்பைக்கு வந்தார். இந்த நேரத்தில், ரேகா 3 மாதங்கள் இந்தி பேசுவதில் கவனம் செலுத்தினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ரேகாவுக்கு ஒரு சம்பவம் நடந்தது, அது அவரை மிகவும் பயமுறுத்தியது. படப்பிடிப்பின் போது ரேகா தனது பிஸ்வஜித் சாட்டர்ஜியுடன் ஒரு காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் இயக்குனர் கட் சொல்லவில்லை, பிஸ்வஜித் ரேகாவை முத்தமிட்டுக் கொண்டே இருந்தார், இதனால் ரேகா  மிகவும் பயந்து போனார். இருப்பினும், இது குறித்து ரேகா எதுவும் கூறவில்லை, ஏனெனில் அவர் ஏதாவது சொன்னால் படத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று அவர் அச்சம் இருந்தது. அதே நேரத்தில், இந்த முத்தக் காட்சியின் காரணமாக, படம் தணிக்கை செய்யப்பட்டது, பின்னர் அது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் ரேகா தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார், பின்னர் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன.

விஜய்யை விட 150 கோடி கம்மி சம்பளம் வாங்கிய ரஜினி! வேட்டையன் பட நடிகர்களின் சம்பள விவரம் இதோ

ரேகா - அமிதாப் காதல்: 

இந்த நேரத்தில், ரேகாவின் பெயர் கிரண் குமார் மற்றும் வினோத் மேத்தாவுடன் இணைக்கப்பட்டது, ஆனால் அமிதாப் பச்சனுடனான அவரது காதல் தான் அதிகம் பேசப்பட்டது. 'தோ அஞ்சானே' படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், இந்த நேரத்தில் அமிதாப் திருமணமானவர். இது அவரது மனைவி ஜெயாவுக்கு தெரிந்ததும், அமிதாப் பச்சன் வீட்டில் இல்லாதபோது, ​​ரேகாவை இரவு உணவிற்கு அழைத்தார். அமிதாப்பை தான் ஒருபோதும் விடமாட்டேன் என்று ஜெயா கூறினார். ஜெயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ரேகா, தானும் அமிதாப்பும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது என்பதை உணர்ந்தார். இதனால் அமிதாப்பிடம் இருந்து ரேகா விலகிச் சென்றார்.

ரேகாவின் கணவர் முகேஷ் தற்கொலை:

இதையடுத்து 1990ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை ரேகா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், திருமணமாகி 3 மாதங்களில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேகாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான 'ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி'யை யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். அதில் முகேஷ் இறந்த பிறகு ரேகா தனது செயலாளர் பர்சானாவுடன் லிவ்-இன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. பர்சானா மட்டுமே ரேகாவின் படுக்கையறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்று யாசிர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். ரேகாவின் வீட்டு வேலைக்காரிக்கு கூட அவரது படுக்கையறைக்குள் செல்ல அனுமதி இல்லை. பர்சானா தான் ரேகாவின் நிழலாக இருக்கிறார். இருப்பினும், இந்த செய்திகள் குறித்து ரேகா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவித்தது இல்லை. 

மயக்கும் மெட்டு போட்ட இளையராஜா.. இரண்டே வரியில் ராமாயணத்தை சொன்ன வாலி - எந்த பாட்டில் தெரியுமா?

click me!