RRR : 'ஜூனியர் என்.டி.ஆர் அரக்கன்' நெட்டிசன்களை திணறடிக்கும் ஆர்.ஆர்.ஆர் பேட்டி

Kanmani P   | Asianet News
Published : Mar 16, 2022, 03:32 PM ISTUpdated : Mar 16, 2022, 04:20 PM IST
RRR : 'ஜூனியர் என்.டி.ஆர் அரக்கன்' நெட்டிசன்களை திணறடிக்கும் ஆர்.ஆர்.ஆர்  பேட்டி

சுருக்கம்

RRR : விரைவில் வெளியாகவுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் டீம் சமீபத்தில் கொடுத்துள்ள கலகலப்பு பேட்டி செம வைரலாகி வருகிறது.

ராஜமௌலியின் அடுத்த அதிரடி :

உலகை ஒரு வலம் வந்த பாகுபலி இரண்டு பாகங்களும் ர் ராஜமௌலிக்கு மாபெரும் பெயரை பெற்று தந்தது. இதையடுத்து அடுத்த அதிரடியாக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் நாயகர்களாக கொண்டு வரலாற்று புகழ் மிக்க கதையை படமாக்கியுள்ளார் ராஜமௌலி.

சுதந்திர போராட்ட வீரர்கள் :

ஆர் ஆர் ஆர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவியது.  இதில் ராம் சரண்  காவல் அதிகாரி சீதராமராஜு, மற்றும் ஜூனியர் என்டிஆர் கொமராம்பீம் ஆகவும் தோன்றியுள்ளனர். வீரர்களின் கதையில் ஈர்க்கப்பட்ட ராஜமௌலி  பிரமாண்ட முயற்சியை முடித்து காட்டியுள்ளார்.. 

மேலும் செய்திகளுக்கு...கையை முறுக்கும் ஆர் ஆர் ஆர் நாயகர்கள்..விரைவில் வெளியாகும் செலிப்ரேஷன் அந்தம்..

நட்சத்திர பட்டாளம் :

 ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. அதோடு இதில் நம்ம ஊர் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். 

பாகுபலி இசையில் ஆர்ஆர் ஆர் :

ராஜமௌலியின் முந்தைய படைப்பான பாகுபலி இரண்டு பாகங்களிலும் பாடல்கள் தெறி வெற்றி பெற்றது. ஒவ்வொரு பாடல் மட்டுமல்லாமல் பின்னை இசையும் மாஸ் காட்டியுள்ளது. இவ்வாறு மனதை கவரும் இசையை  கீரவாணியே  உருவாக்கியிருந்தார். பாகுபலி ஹெட்ரிக் வெற்றியை அடுத்து ஆர் ஆர் ஆர் படத்திலும் கீரவாணி இசையமைத்துள்ளார். இதில் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பிரமாண்ட தயாரிப்பு :

ராஜமௌலி என்றாலே பிரமாண்டம் என்றாகிவிட்டது. பல கோடி செலவில் பாகுபலி இரண்டு பாகங்களும் வெளியாகி இருந்தது. முன்னதாக ராஜமௌலியின் படைப்பான ஈ மாஸ் கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டி இருந்தது. இதையடுத்து தற்போது ஆர் ஆர் ஆர் ர்.350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் உருவாகியுள்ளதாம்.

ஆர் ஆர் ஆர் ப்ரோமோஷன் :

சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் ட்ரைலர்   மிகப்பெரிய வெற்றியை கொண்டாடியது. அதோடு மாஸ் பீஜியம், கலக்கல் ஸ்டண்ட் என தெறிக்கவிட்டிருந்த ஆர்ஆர் ஆர் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்ததோடு. ரசிகர்ளை அதிகம் ஈர்த்திருந்தது.

ப்ரோமோஷன் விழா :

கடந்த பொங்கல் விடுமுறையில் வெளியாவதாக இருந்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு. இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ள ஆர் ஆர் ஆர் படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சிவகார்த்திகேயன், உதயநிதி உழைத்த முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு...Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு

விரைவில் வெளியாகும் ஆர் ஆர் ஆர் : 

கடந்த ஜனவரியில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவலால் படம் தள்ளிப்போனது. இதையடுத்து வரும் மார்ச் 25 -ம் தேதி ஆர் ஆர் ஆர் ரிலீஸ் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது. 

படக்குழுவினரின் கலகலப்பு பேட்டி :

படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர் ஆர் ஆர் படக்குழு சமூகவலைத்தளங்களில் சுவாரஸ்ய பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தி காமெடி நடிகர் புவன் பம் உடன் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் உரையாடியுள்ளனர். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் ராஜமௌலியை அடிக்கடி வேலை அரக்கன் என ஏன் அழைக்கிறீர்கள் என்று ஜூனியர் ஆன்டிஆரிடம் கேட்ப்பட்டதற்கு, அவர் நினைத்தபடி சரியாக வேலை நடக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து காப்பாற்ற மருந்து இல்லை என கூறியுள்ளார்.

இது குறித்து ராஜமௌலியிடம் கேட்டபொழுது, மஞ்சள் காமாலைக்காரன் பழமொழியை சுட்டிக்காட்டிய இயக்குனர், ஜூனியர் ஒரு அரக்கன் அதனால் தான் நானும் அரக்கனாக தெரிகிறேன் என்று கூறியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?