RRR Australia box office: பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர்.இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ஓடி கொண்டிருக்கும் நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இரு பெரும் நட்சத்திரங்கள்:
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளார் ராஜமௌலி. மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்பதிவு மட்டுமே சுமார் 750 கோடிகள்:
ராஜமௌலியின் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்ட படம் என்பதால், மார்ச் 22 செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் படத்தின் முன்பதிவு துவங்கி சுமார் 750 கோடிகள் வரை சம்பாதித்துள்ளது. இதன்முலம், ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது.கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கதைக்களம்:
1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். மேலும், படம் பிரமாண்டமாக இருப்பதற்காக படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிக அளவு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் Vs ஆர் ஆர் ஆர் திரைப்படம்:
ரசிகர்களால் கொண்டாடப்படும், விஜய்யின் படு மாஸாக திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. தற்போது, ஆர் ஆர் ஆர் பல பிரச்சனைகளை கடந்து நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நேற்று பிரமாண்டமாக வெளியானது. இந்நிலையில், இதன் வசூல் விவரம் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
ஆஸ்திரேலியா வசூல் விவரம்:
அந்த வரிசையில், தற்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியாவில் மட்டும் $441K வசூலித்துள்ளது. முன்னதாக, விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253K மட்டுமே வசூலித்திருந்தது. எனவே, ஒரு நாளில் மாஸ்டர் பட வசூலை ஆர் ஆர் ஆர் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.