
பிரபல இயக்குனர் :
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் பிரதேசித்தவர் விக்னேஷ் சிவன். இவரின் முதல் படமே வெற்றி பெற்றது. காரணம் நயன்தார, விஜய் சேதுபதி என நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்ததே. இந்த படத்தின் மூலம் நல்ல பெயரை வென்றெடுத்த விக்கி. தனது சொந்த கதையை படமாக இயக்கி இருந்தார்.நானும் ரவுடிதான் படத்தில் ராதிகாவை போலவே விக்கியின் தாயாரும் காவல் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.
தொடர் வெற்றி :
முன்னதாக சிம்பு, வரலட்சுமி நடித்திருந்த போட போடி படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ். இதையடுத்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பவக்கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இதில் இறுதியாக இவர் இயக்கிய கத்துவக்குல ரெண்டு காதலில் விஜய் சேதுபதி, நயன்தார, சமந்தா நடித்துள்ளனர். தற்போது அஜித்தின் 63 வது படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றுள்ளார் விக்னேஷ்.
மேலும் செய்திகளுக்கு...Ajith 62 movie update: மொத்த திரையுலகின் வாழ்த்து மழையில் நனைந்த விக்னேஷ் சிவன்...! நெகிழ்ச்சியில் நயன்தாரா.!
படலாசியராக அறியப்பட்ட விக்கி :
நானும் ரவுடிதான் படத்தில் அனைத்து பாடலையும் விக்னேஷ் சிவன் இயற்றியிருந்தார். அதோடு தான சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, மாஸ்டர்,வலிமை, எதற்கும் துணிந்தவன், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பில் விக்னேஷ் சிவன் :
பல ஆண்டுகளாக காதல் உறவில் இருக்கும் நயன்தாரா-விக்னேஷ் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலம் நயன்தாராவின் நெற்றி கண், கூழாங்கல், ஊர்க்குருவி, கனெக்ட் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் கூழாங்கல் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...Ajith 62 : பாகிஸ்தானிலும் பரவிய அஜித் புகழ் ... புதிய படம் குறித்து பத்திரிக்கையாளரின் அசத்தல் ட்வீட்..
ப்ராங்கில் இறங்கிய இயக்குனர் :
பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் செய்துள்ள சேட்டை தற்போது வைரலாகி வருகிறது. அதாவது காமெடி நடிகர் பிஜிலி ரமேஷை செட்டில் வைத்து அவர் கலாய்க்கும் கலப்பான வீடியோ தான் அது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.