கனெக்ஷன் கொடுத்த வீராட் கோலி..கடுப்பான அனுஷ்கா சர்மா..க்யூட் வீடியோ உள்ளே..

Kanmani P   | Asianet News
Published : Mar 25, 2022, 03:16 PM IST
கனெக்ஷன் கொடுத்த வீராட் கோலி..கடுப்பான அனுஷ்கா சர்மா..க்யூட் வீடியோ உள்ளே..

சுருக்கம்

விளம்பரத்தில் அனுஷ்கா சர்மா தனது கணவரான விராட் கோலியை கடுமையாக முறைப்பதன் மூலம் தன கருத்து வெளிப்படுத்துகிறார்.  

பாலிவுட் பிரபலம் அனுஷ்கா :

அனுஷ்கா ஷர்மா பாலிவுட் பிரபலம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் .  2012 - ல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் 100 இல் ஒருவராக  தோன்றினார். முன்னதாக கடந்த 2018-ல்  ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 30 வயதுக்குட்பட்ட 30 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தார். தற்போது அனுஷ்கா சர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில்  நடித்து வருகிறார்.

ஷாரூக்கானுக்கு ஜோடியான அனுஷ்கா :

ஷாருக்கானுக்கு  அறிமுகமான அனுஷ்கா பல வெற்றி படங்களில் நடித்து ரசிர்கள் மனதில் இடம் பிடித்தவர். ஜப் தக் ஹை ஜான் படத்தில் நடித்திருந்த அனுஷ்காவிற்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. சுய் தாகா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரரை மணமுடித்த அனுஷ்கா:

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் -அனுஷ்காவிற்கு காதல் என பல ஊடகங்களும் கிசுகிசுத்தன. ஆனால் இருவரும் இது குறித்த எந்த பதிலையும் அளிக்காமல் இருந்தனர். பின்னர் இந்த ஜோடி கடந்த 11 டிசம்பர் 2017 அன்று இத்தாலியில் திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிகளுக்கு 11 ஜனவரி 2021 அன்று, ஷர்மா வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மேலும் செய்திகளுக்கு...Anushka Sharma : கிரிக்கெட் வீராங்கனையாக ..விராட் கோலியின் மனைவி.. பவுலிங் வித்தை காட்டும் அனுஷ்கா.

சமூக ஊடகங்களை கலக்கும் ஜோடி :

கிரிக்கெட்டில் விராடும், பட வேலைகளில் அனுஷ்காவும் படு பிஸியாக இருந்து வருகின்றனர். ஆனாலும் அவ்வப்போது அவுட்டிங் செல்லும் இந்த நட்சத்திர தம்பதிகள் தங்களது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து அவ்வப்போது சமூக ஊடகத்தை நிரப்புவார்கள். இவர்களது படங்கள் பலரால் பார்க்கப்பட்டு பிரபலமாக்கப்படும்.

விளம்பர படத்தில் தோன்றிய இணை:

தற்போது அனுஷ்காவும், வீராட் கோலியும் இணைந்து புதிய விளம்பர படத்தில் நடித்துள்ளனர். வீட்டை அழகுபடுத்தும் நிறுவனம் சார்ந்த இந்த விளம்பரத்தில் அனுஷ்கா தனது தலையில் அணியும் கிளிப்பை தேடுகிறார். அப்போது விராட் அந்த கிளிப்பை வைத்து வயர்களை இணைக்க முயற்சிப்பதை பார்த்து வெறுப்படைகிறார். இந்த காட்சியில் சராசரி மனைவிகளின் பிரதிநிதியாக அனுஷ்கா தோன்றுவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ