
அடுத்தடுத்து வாக்கவுட் :
கமல் விலகிபிறகு அடுத்த சில நாட்களில் வனிதா வெளியேறினார். கடும் மன அழுத்தில் இருந்த வனிதா திடீரென ஒருநாள் இரவில் கத்தி கலாட்டா செய்தார். அதோடு வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார். இவரையடுத்து வனிதாவின் இடத்தை நிரப்பிய சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நிலை பாதிக்கப்பட்ட தானே வெளியேறி விட்டார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
முன்னதாக எலிமினேட் செய்யப்பட்டிருந்த சுரேஷ் சக்ரவர்த்தி வனிதா விலகியதை அடுத்து சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக மீண்டும் சுரேஷ் கொண்டுவரப்பட்டார். இவரை அடுத்து கேபிஒய் பிரபலம் சதீஸ் உள்ளே வந்தார். பின்னர் முத்தையா போட்டியாளர்களாக ஓவியா அல்லது லாஸ்லியா உள்ளே வருவார்கள் என எதிரிபார்க்கப்பட்டது. ஆனால் ரம்யா பாண்டியன் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார். நேற்று தீனாவும், இன்று சாண்டி வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா?
போட்டியில் கலவரத்தை தூண்டும் ஹவுஸ் மேட்ஸ் :
தலைவரை தேர்ந்தெடுக்க, லக்சுரி பட்ஜெட் வாங்க என ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மற்ற நேரம் அமைதியாக இருந்தாலும் டாஸ்க் என்று வந்து விட்டால் ஒருவருக்கொருவர் அடிக்காத குறையாய் சண்டை போட்டுக்கொள்வர். அவ்வாறு கடும் கோபத்தில் பாலா, நிரூப் இருவரும் மற்ற ஹவுஸ் மேட்டுகளுடன் அடிக்கடி மோதிக்கொள்வார்கள்.
எனக்கென இருக்கும் சதீஷ்:
சதிஷ் வந்ததில் இருந்து எனக்கென்ன என சதீஷ் இருந்து வருவதாக மற்ற போட்டியாளர்கள் குறி வருகின்றனர். அதோடு இவர் சுவாரஸ்யம் சேர்க்கவில்லை என்பதற்ககாகவே விஜய் டிவியின் மற்றோரு பிரபலம் தீனா வரவழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் ரம்யாவும், பாலாவும் டாஸ்க் குறித்து கடுமையாக சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது சதீஸ் எதையும் கண்டு கொள்ளாமல் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.