மற்ற நடிகர்களைப் போலவே, நடிகர் அஜித் குமாரும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். மிகவும் நுணுக்கமான மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவராகத் திகழும் அஜித் தனது திரைப்படங்கள் மூலம் தனது அற்புதமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஈர்த்துள்ளார். என் வீடு என் கனவர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய அஜித், 1993 இல் 'அமராவதி' மூலம் ஹீரோவானார். இந்த படம் வசூல் ரீதியில் வரவேற்பை பெற்ற நிலையில், முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இடையில் ஓரிரு தோல்வி படங்களை கொடுத்தாலும் 'காதல் கோட்டை', 'காதல் மன்னன்', 'காதல் தேசம்', 'காதல் மன்னன்' ‘அமர்க்களம்’ 'தீனா', 'வில்லன்', 'சிட்டிசன்', 'முகவரி', 'வில்லன்', 'வேதாளம், 'துணிவு' உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் மற்ற நடிகர்களைப் போலவே, அஜித் குமாரும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2010ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. இதில் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி முன்பு அஜித் பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மேடையில் பேசிய அஜித் “ திரைத்துறை வாரியங்களில் உயர் பதவிகளில் உள்ள சிலர் அரசியல் நிகழ்ச்சிகளில் நடிகர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி வர சொல்கின்றனர். அப்படி கலந்து கொள்ளவில்லை எனில் தமிழ் எதிர்ப்பாளராக சித்தரிக்கின்றனர். நடிகர்களை நடிக்க விரும்புகின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம்.எங்களை நடிக்க விடுங்கள். இதற்கு முதலமைச்சர் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அஜித் இப்படி கருத்து தெரிவித்ததன் மூலம் தனது ஆணவத்தை காட்டிவிட்டதாக திமுக தரப்பில் ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்தர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அஜித்தின் முன்னோர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவரது தாயார் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரை தமிழர் இல்லை என்று குறிப்பிடத் தொடங்கினர்.
இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து, அஜித் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசினார். அப்போது “ எனக்கு பிரச்சனையை ஏற்படுத்துவது அரசியல்வாதிகள் இல்லை. திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். ன்று வெளிப்படுத்தினார். அரசியல்வாதிகளோ அல்லது அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களோ எனக்கு சிக்கலை ஏற்படுத்தவில்லை என்பது எனது வலுவான நம்பிக்கை. அவர்களுக்குக் இன்னும் தீவிரமான பிரச்சினைகள் உள்ளன, அற்ப விஷயங்களில் ஈடுபட நேரமில்லை. ஆனால் அரசியல் நிகழ்ச்சிகளில் ஒரு நடிகர் பங்கேற்க வேண்டும் என்று ஒரு குரூப் உள்ளது. அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை எனில் அந்த நடிகரின் பிறப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்." என்று தெரிவித்தார்.
தமிழர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அஜித் “நான் தமிழனாக வளர்ந்தேன்" என்று கூறினார். மேலும் “ சினிமா மக்களை ஒன்றிணைப்பதாக உணர்கிறேன். ஆனால் கலையில் பிளவுகளை ஏற்படுத்தும் போக்கு வருத்தமளிக்கிறது. ஒரு ரசிகர் கிரிக்கெட் போட்டிக்கோ, படத்துக்கோ டிக்கெட் வாங்கும் போது, அவர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் நிறம், மதம், மதம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள எந்த நடிகரின் ரசிகர் பட்டாளத்தையும் பார்த்தாலே தெரியும். அவர்கள் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்,” என்று அஜித் தெரிவித்தார்.