Rani Mukerji Talk about Kamal Haasan Who Asked me to remove Makeup : ஷூட்டிங்கிற்கு சென்ற தன்னை முகத்தை கழுவிவிட்டு வருமாறு கமல் ஹாசன் சொன்னதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜூ கூறியுள்ளார்.
ஷூட்டிங்குக்கு மேக்கப் போட்டுட்டு வந்த ராணி முகர்ஜியை, முகம் கழுவிட்டு வரச் சொன்னாராம் கமல் ஹாசன். துடைச்சிட்டு வந்தா, சோப்பு போட்டு கழுவிட்டு வரச் சொல்லி மறுபடியும் சொன்னதாக ராணி முகர்ஜியே சொல்லியிருக்கிறார். அது என்ன ஸ்டோரி என்று பார்க்கலாம் வாங்க. பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.
பொதுவாக சினிமா ஷூட்டிங்கிற்கு நடிகர், நடிகர்கள் எல்லோமே மேக்கப் போட்டு தான் வருவாங்க. ஒரு சிலர் மட்டுமே கேரவன் சென்று மேக்கப் போடுவார்கள். ஆனால், இங்கு மேக்கப் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்து தான் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது மேக்கப் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆசை நிறைவேறிடுச்சு; குட்நியூஸ் சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்!
சினிமா ஷூட்டிங்கிற்குப் போகும்போது, நடிகர் நடிகைகள் மேக்கப் போட்டுட்டுத்தான் போவாங்க. அந்த மாதிரி ராணி முகர்ஜியும் ஷூட்டிங்கிற்குப் போயிருக்காங்க. ஆனா, அந்தப் படத்தோட இயக்குநர் ராணி முகர்ஜியைப் பார்த்ததும், 'முகம் கழுவிட்டு வாங்க'ன்னு சொன்னாராம். மேக்கப் ரூமுக்குப் போன ராணி, அங்கங்க தூடைச்சிட்டு மறுபடியும் இயக்குநர் முன்னாடி நின்னாராம்.
அதுக்குச் சம்மதிக்காத இயக்குநர், 'இப்படி இல்ல, முகம் ஃபுல்லா சுத்தமா கழுவிட்டு வாங்க'ன்னு சொன்னாராம். அப்போ ராணி முகர்ஜி சோப்பு போட்டு முகம் கழுவிட்டு இயக்குநர் முன்னாடி நின்னாங்க. அப்போ அவர் 'இப்போ நீதான் என் படத்துல அபர்ணா'ன்னு சொன்னாராம். அப்போதான் ராணி முகர்ஜிக்கு அந்தப் படத்துல மேக்கப் கிடையாதுன்னும், லைட்டிங் வெச்சுதான் ஷூட் பண்ணுவோம்னு சொன்னாராம்!
இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை விட சிறப்பான படம் பராசக்தி: சுதா கொங்கரா!
இது 'ஹே ராம்' படம். கமல் ஹாசன் இயக்கிய இந்தப் படத்துல ராணி முகர்ஜி 'அபர்ணா' கேரக்டர்ல நடிச்சு மெய்ப்பிச்சாங்க. ஹே ராம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறல. ஆனா, சில பேருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பாக்ஸ் ஆஃபீஸ்ல மட்டும் ஹே ராம் அந்த அளவுக்கு ஈர்க்கல.
ஹே ராம் படம் ஃபிப்ரவரி 18, 2000-ல ரிலீஸ் ஆச்சு. இந்தப் படத்துக்குக் கமல் ஹாசனே இயக்கம் பண்ணி, நடிகர் நடிகைகளையும் தேர்வு பண்ணினார். நடிகை வசுந்தரா தாஸ் கூட முக்கியமான கேரக்டர்ல நடிச்சாங்க. இந்தப் படம் டெக்னிக்கலா ஆச்சரியமாக இருந்தது. பட்ஜெட்டும் அதிகம்தான். இந்தப் பட ஷூட்டிங்ல நடந்த சம்பவத்தை ராணி முகர்ஜி இப்போ பகிர்ந்துக்கிட்டதால அது வைரல் ஆகியிருக்கு.
புது படங்களுக்கு - பழைய டைட்டில்; சிவகார்த்திகேயன் சாதனையை முறியடித்த தனுஷ்!