ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய குறும்படமான 'அனுஜா' பிப்ரவரி 5 ஆம் தேதி ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என நெட்ஃபிக்ஸ் அறிவித்துள்ளது.
ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கியுள்ள, 'அனுஜா' குறும்படம், 97வது அகாடமி விருதுகளில் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. 'ஏலியன்', 'ஐ'ம் நாட் எ ரோபோட்' போன்ற சில குறும்படங்களுக்கு எதிராக போட்டியிட்டு பலரின் மனதை கவர்ந்தது.
இந்த படத்தின் கதை மிகவும் ஆழமானது என கூறலாம், "அனுஜா என்ற ஒன்பது வயது சிறுமி அவளுடைய சகோதரி பாலக்குடன் சேர்ந்து, அவர்களின் பந்தத்தை சோதிக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் போராட்டங்களை பிரதிபலிக்கும் பிரச்னையை எதிர்கொள்கிறார். இந்த படத்தை இரண்டு முறை அகாடமி விருது பெற்ற குனீத் மோங்கா தயாரிக்க நடிகை ப்ரியங்கா சோப்ரா இந்த படத்தை ஆதரித்து பேசினார்.
படத்தை ஆதரிப்பவர்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, இந்த படம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்: "இது ஒரு அழகான படம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயம் என கூறினார். "அனுஜா ஒரு அழுத்தமான, சிந்தனையைத் தூண்டும் ஒரு அற்புதமான பதிவு. பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை ஆழமாக பிரதிபலிக்கிறது. இது போன்ற ஒரு அற்புதமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படத்துக்கு ஆதரவு கொடுப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என கூறினார்.
விஜய் சொன்ன வார்த்தை; 90 கோடி நஷ்டம் குறித்து முதல் முறையாக பேசிய சேவியர் பிரிட்டோ!
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்காவும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். குனீத் ஏற்கனவே , அவர் தயாரித்த முந்தைய திட்டங்களான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'பீரியட்: என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆகிய இரண்டும் படைப்புகளுக்கு அகாடமி விருதுகளை வென்றுள்ளார். அனுஜா குறும்படம், வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.