நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்று தங்க மெடல்களை வென்று அசத்தி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸில் பங்கேற்காமல் இருந்த அஜித், இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்துகொண்டு 3ம் இடத்தையும் வென்று அசத்தினார். இதுதவிர அடுத்தடுத்து நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதால் அடுத்த அக்டோபர் மாதம் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அஜித்குமார் அறிவித்துள்ளார்.
அஜித்குமாருக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இதில் அஜித்தின் மகன் ஆத்விக், விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் இவர் சென்னையின் எஃப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கிறார். பள்ளியில் படித்து வரும் ஆத்விக், அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டு அதில் முதலிடம் பிடித்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல மொத்தம் 3 ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்ட ஆத்விக் மூன்றிலும் முதலிடம் பிடித்து 3 தங்க மெடல்களையும் வாங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஃபாரினில் இருந்து வந்ததும் ‘பத்ம பூஷன்' அஜித்துக்கு நச்சுனு வாழ்த்து சொன்ன ரஜினி!
முதலில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிங்கம்போல் சீறிப்பாய்ந்த ஆத்விக், வேகமாக ஓடி வந்து முதலிடம் பிடித்தார். பின்னர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தன்னுடைய அணிக்காக உயிரைக் கொடுத்து ஓடிய ஆத்விக் அதிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். மகன் ஓடியதை வீடியோ எடுத்த ஷாலினி, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தந்தையைப் போலவே மகனும் விளையாட்டில் சாதிக்கிறான் என வாழ்த்தி வருகின்றனர். அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
அஜித் மகன் ஆத்விக், உசைன் போல்ட் போல் சீறிப்பாய்ந்து ஓடுவதாக பாராட்டும் நெட்டிசன்கள், அவர் மென்மேலும் விருதுகளை வெல்ல வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள். ஆத்விக் அஜித்குமாரின் ஓட்டப்பந்தய வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு, அவர் ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல் வாங்கியபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு, தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறான் என சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மகன் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதால் அஜித்தும் செம் சந்தோஷத்தில் உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... அஜித்தின் புதிய படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?