ஜாதி, மத பேதமின்றி ஆகஸ்ட் 15-ந் தேதி மறக்காம இதை செய்யுங்க - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

By Ganesh A  |  First Published Aug 13, 2022, 3:10 PM IST

Rajinikanth : நம் வீட்டின் முன் தேசிய கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம். நாடு இல்லைன்னா நாம இல்ல, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமைகொள்வோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டின் வெளியே தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அவரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்களில் முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டு வாயிலில் சுதந்திர கொடியை பறக்க விட்டார். அதேபோல் நடிகர் விஜய்யும் தனது மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பிரதமர் சொன்னதை தட்டாமல் செய்யும் ரஜினிகாந்த்... போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்!

🇮🇳💪 pic.twitter.com/VXrQSqNf8h

— Rajinikanth (@rajinikanth)

இந்நிலையில், இதுகுறித்து சிறப்பு வீடியோ ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி உள்ளதாவது : “இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள், பல லட்சம் பேர், எவ்வளவோ சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிச்சிருக்காங்க. எத்தனையோ பேர் அவர்களது உயிரையே தியாகம் பண்ணிருக்காங்க.  

அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம். நாடு இல்லைன்னா நாம இல்ல, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமைகொள்வோம். ஜெய் ஹிந்த்” என கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  நடிகர் விஜய்யின் வீட்டு முன் ஜொலிக்கும் தேசியக்கொடி மின் அலங்காரம்

click me!