ரஜினிகாந்த் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்! வைரலாகும் வீடியோ..!

By manimegalai aFirst Published Aug 13, 2022, 1:13 PM IST
Highlights

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இதனை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பள்ளி குழந்தைகளை சந்தித்து மூவர்ணக் கொடி பற்றியும், நாடு சுதந்திரம் அடைய போராடிய வீரர்கள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாணவர்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து விவரித்து.. பாடம் எடுத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி திரையுலகில் வந்தார் என மாணவர்களுக்கு அவர் இந்த வீடியோவில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா! போயும்... போயும்.. இப்படி ஒரு கதாபாத்திரமா? லேட்டஸ்ட் அப்டேட்!
 

ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் ஒரு டிரைவராக இருந்து, தன்னுடைய நண்பர் உதவியுடன்...  சினிமா இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பின்னர் நடிகராக மாறினார் என தெரிவிக்கிறார். ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமா துறையில் உச்சம் எட்டினார் என்று அவர் மாணவர்களுக்கு மிகவும் எளிமையாக விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 மேலும் செய்திகள்: விஜய்யின் 6 வயதில்... அவரது தந்தைக்கு இரண்டாவது முறையாக நடந்த திருமணம்..! வைரலாகும் புகைப்படம்!
 

ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்க கூடிய பிரபலங்கள் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ரஜினி. தன் விடாமுயற்சியால் எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு ரோல் மாடல்"

சொல்வது மத்திய பிரதேச முதல்வர் 😍🔥🔥👌 pic.twitter.com/uzSBWpUxhg

— JAILER RAGHAVAN 🔥🤘 (@DarbarThalaivar)

 

click me!