குடும்ப விழாவில் கலந்து கொள்ள தனது கணவர் போனிகபூருடன் சென்றிருந்த ஸ்ரீதேவி. அன்றிரவு குளியல் தொட்டியிலிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுவரை இவரது மரண முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.
தென்னிந்திய திரை உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் சிவகாசிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். தெலுங்கு ஃபேமிலியை சேர்ந்த ஸ்ரீதேவி. கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் துணைவன் படத்தில் இளமுருக வடிவில் அன்றைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஸ்ரீதேவி. பின்னர் தெலுங்கு சினிமா உலகிலும் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.
தமிழ் தெலுங்கு என பன் மொழி திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இவருக்கு 16 வயதினிலே படம் மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. தென்னிந்திய படங்களில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவி. பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை கடந்த 1996 ஆம் ஆண்டு மணமுடித்தார். இவர்களுக்கு ஜான்விகபூர், குஷி கபூர் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...hansika Motwani : கிளாமர் உடையில் பர்த்டே பேபி..ஹன்ஷிகாவின் பார்டி மோட் !
சினிமாவிலும், சொந்தவாழ்க்கையிலும் மிகவும் சிறப்பான தருணங்களை ருசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு அகால மரணமடைந்தார். குடும்ப விழாவில் கலந்து கொள்ள தனது கணவர் போனிகபூருடன் சென்றிருந்த ஸ்ரீதேவி. அன்றிரவு குளியல் தொட்டியிலிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுவரை இவரது மரண முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.
ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் இருவருமே பாலிவுட்டில் நடிகைகளாக என்ட்ரி கொடுத்து விட்டனர். இதில் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து விட்ட இவர் சில விருதுகளையும்பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் குட்லக் ஜெர்ரி படம் வெளியானது. இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு...விதவிதமான கிளாமர் லுக்கில் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பிரபல நடிகைகள்
இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின் 59 ஆவது பிறந்தநாள். இவரது மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது மேடைகளில் தனது தாயைப் பற்றிய கருத்துக்களை கூற தவறியது இல்லை. அந்த வகையில் ஸ்ரீதேவியின் இவரது பிறந்தநாளை ஒட்டி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள ஜான்வி, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் செய்கிறேன் எனக் கூறி தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. பாவடை..ப்ளவுஸுடன்..பட்டையை கிளப்பும் அஞ்சலி...வரவர கிளாமர் போஸ்க்கு எல்லையில்லாமல் போனது!
அதேபோல குஷி கபூர் தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் தாயுடனான தருணத்தை பகிர்ந்துள்ளார். கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த படமே சொல்கிறது. ஸ்ரீதேவி மகளின் சோகத்தை..