ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட ரஜினியின் ‘எஜமான்’... நடிகர் சரத்பாபுவுக்கு என்ன ஆச்சு? - ஹெல்த் அப்டேட் இதோ

By Ganesh A  |  First Published Apr 23, 2023, 10:17 AM IST

நடிகர் ரஜினிகாந்த் உடன் முத்து, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.


ஆந்திராவில் பிறந்தவரான நடிகர் சரத்பாபு, கடந்த 1971-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சரத்பாபு ஹீரோவாக நடித்திருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது, அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்து, அண்ணாமலை போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் தான்.

குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான முத்து திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் எஜமானாக நடித்து அசத்தி இருப்பார் சரத்பாபு. அவரின் கெரியரில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி இருந்தார் சரத்பாபு.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் இருந்த சிவாங்கியை காப்பாற்றிய நடுவர்கள்... அப்போ குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா?

நடிகர் சரத் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆகிறது. வயதாகிவிட்டதால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓய்வெடுத்து வந்த இவருக்கு செப்சிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாத இறுதியில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சரத்பாபுவின் உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதை அடுத்து அண்மையில் ஐசியூவிற்கு மாற்றப்பட்ட சரத்பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது வெளியாகியுள்ள அவரின் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்டின் படி சரத்பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தற்போது அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

இதையும் படியுங்கள்... அதிக சம்பளம் கேட்ட வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பாரதிராஜா - இது எப்ப?

click me!