கையில் அம்பேந்திய பிரபாஸ்! அட்சய திரிதியை முன்னிட்டு வெளியான 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் மற்றும் பாடல்!

Published : Apr 22, 2023, 05:08 PM IST
கையில் அம்பேந்திய பிரபாஸ்! அட்சய திரிதியை முன்னிட்டு வெளியான 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் மற்றும் பாடல்!

சுருக்கம்

அட்சய திரிதியை முன்னிட்டு, 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஸ்ரீ ராம்' எனும் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.  

'ஆதி புருஷ்' படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ ராம பிரானின் வேடத்தில் தோன்றும் போஸ்டர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அட்சய திரிதியை புனித நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் ராமபிரானின் தோற்றத்தில் பிரபாஸ் பொருத்தமாக தோன்றியிருப்பது குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களை உற்சாகப்படுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 'ஜெய் ஸ்ரீராம்' 
எனத் தொடங்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் அடங்கிய ஒலி துணுக்குகள் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசை..., ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் அஜய்- அதுல் இசையமைத்திருக்கும் 60 வினாடிகள் கொண்ட பன்மொழி பதிப்பு மற்றும் பிரத்யேக போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய் மகளுக்கே இப்படி நடந்த சும்மா விடுவார்களா? ஆராத்யா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போஸ்டரில் பிரபாஸ் கையில் வில்... அம்போடு ராமபிரான் தோற்றம் உள்ளார். மேலும் இந்த போஸ்டருடன் வெளியாகி இருக்கும் ஜெய் ஸ்ரீராம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Anupama Parameswaran : அம்மாடியோ!!! டைட்டான உடையில் உடலை நெளித்து நளினம் காட்டும் 'அனுபாமா' போட்டோஸ்
Iswarya Menon : அவள் உலக அழகியே!! லெகங்காவில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் கண்கவர் கிளிக்ஸ்!