பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனின் தாயார், சூடாமணி மறைந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பாடகி சுதா ரகுநாதனின் தாயார் சூடாமணி ஒரு கர்நாடக இசை கலைஞர் ஆவார். இவர் தான் தன்னுடைய மகளுக்கு ஆரம்ப கால குருவாக இருந்து இசையை பயிற்றுவித்து, இசை மீதான ஆர்வத்தை தூண்டியவர். தற்போது, எட்ட முடியாத உயர்ந்து நிற்கும் சுதா ரகுநாதனை சங்கீத மேதையாக செதுக்கிய பெருமை இவரையே சேரும்.
அன்று இவரின் தாயார் இசைக்கு இட்ட அடித்தளம் தான், சுதா ரகுநாதனை... பின்னாளில் கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், சங்கீத கலாநிதி, சங்கீத சரஸ்வதி போற பல விருதுகளை பெற வைத்தது. கர்நாடக இசையை தாண்டி, இவன் படத்தின் மூலம் இளைய ராஜா இசையில் திரையுலகிலும் பின்னணி பாடகியாக அறிமுகமானார் சுதா ரகுநாதன்.
இந்நிலையில் இவர் கண்ணீரோடு, தன்னுடைய தாயார் மரணம் குறித்து போட்டுள்ள பதிவு... ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த பதிவில், 'என் தாயார் அத்தகைய வலுவான அடித்தளத்தை அமைத்தார். என்னை செதுக்கினார், என் எல்லைகளை நீட்டினார், எனக்கு சிறந்ததை மட்டுமே எப்போதும் வேண்டிக் கொண்டார், என் வெற்றியில் என்னை ஒருபோதும் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை, நான் அயராது பயணம் செய்தேன் என கூறியுள்ளார்.
மேலும் நேற்றிரவு என் அன்னை சூடாமணி அம்மா அவர்கள் இறைவனின் தாமரை பாதத்தில் இருக்க... இறுதி மூச்சு விட்டார்கள் என்கிற தகவலையும் பகிர, ரசிகர்கள் பலர் தங்களின் இரங்கலை சுதா ரகுநாதனின் தாயாருக்கு தெரிவித்து வருகிறார்கள்.