
முன்னாள் கணவர் நாக சைதன்யாவை குறிப்பிடும் டாட்டூவுடன் நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் சிட்டாடல் படத்தின் லண்டன் பிரீமியர் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது ஹாலிவுட் நட்சத்திரம் ஸ்டான்லி டுசியுடன் சம்ந்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது விலா எலும்புக்கு அருகே பச்சை குத்தியிருப்பதை கவனித்த அவரது ரசிகர்கள் தற்போது அதனை பேசுபொருளாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சைடு போஸ்... அந்த இடத்தை காட்டி கிளாமர் அலப்பறை செய்த ஹன்சிகா! அதுக்குன்னு கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படியா?
அந்த டாட்டூ நாக சைதன்யாவை குறிப்பதாகும். முன்பு சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக இருந்தபோது நாக சைதன்யாவின் பெயரை சமந்தா டாட்டூவாக குத்திக்கொண்டார். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் அவர் பிரிந்து வாழ்ந்தாலும் இன்னும் டாட்டூவை அகற்றவில்லை என்பதை உணர்த்துகிறது. சமந்தா, தனது கழுத்தின் கீழ் மற்றொரு பச்சையும் குத்தியுள்ளார். நாக சைதன்யாவுடன் அவர் நடித்த யே மாயா செசவே (ஒய்எம்சி) என்ற அவரது முதல் படத்தின் நினைவாக இது போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அட கடவுளே... நடிகர் விக்ரமுக்கு இப்படி நடந்ததா? அதை மறைச்சிட்டார்.. கொளுத்தி போட்ட பயில்வான்! பதறிய ரசிகர்கள்!
சமந்தா கடைசியாக நடித்த சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. யசோதாவுக்குப் பிறகு இதுவே அவரது முதல் பெரிய படமாகும். வருண் தவானுடன் இணைந்து நடிக்கும் சிட்டாடல் படத்தில் சாம் பணியாற்றி வருகிறார். தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு ராஜ் மற்றும் டி.கே உடன் அவர் இணைந்துள்ள இரண்டாவது கூட்டணி இதுவாகும். குஷி என்னும் காதல் கதையில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இது செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷின் மகாநதி படத்தில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.