நந்தினியின் சதியே காரணம்..! கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' இன்ட்ரோ வீடியோ!

By manimegalai a  |  First Published Apr 22, 2023, 2:55 PM IST

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் உருவாகியுள்ள இன்ட்ரோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
 


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30 ஆம் தேதி வெளியாகி... பிரமாண்ட ஓப்பனிங் கண்டதோடு, ரசிகர்களின் அமோக வரவேற்போடு, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலி பாலா ஆகியோர் தீவிர புரோமஷன் பணியில் இறங்கியுள்ள நிலையில், படக்குழுவும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணமாக சில புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

ராதிகாவின் 'கிழக்கு வாசல்' தொடரில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட சஞ்சீவ்..! அவருக்கு பதில் இனி இந்த பிரபலமா?

அந்த வகையில் கமல்ஹாசனின் கர்ஜனை குரலில்... ஒலிக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் கமல் ஹாசன்... 'ஆண்டு 968, சோழர்களின் பூமி உக்கிரமான ஒரு போரை எதிர்நோக்கி இருந்தது. ராஷ்டிர குல மன்னன் படை வந்து கொண்டிருந்த நிலையில், வீரபாண்டியன் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய நாட்டினர் சோழ நாட்டிற்கு ஊடுருவி இருந்தனர். சுந்தர சோழன் பெரிய தந்தை கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் தந்தையின் விருப்பத்தையும் தாயின் ஆணையையும் மீறி மணி முடிக்கு ஆசைப்பட்டு சதிகாரர்களுடன் கைகோர்த்தார். சோழ நாட்டின் நிதி அமைச்சர், பெரிய பழுவேட்டரையர், மதுராந்தகருக்கு துணையாக இருந்தனர்.

இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பெரிய பழுவேட்டரையர் மனைவி நந்தினி பாண்டியர்களுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்கினார். இளவரசன் அருள்மொழிவர்மனை இலங்கையில் சிறைப்பிடித்து வர அரசரை கொண்டு ஆணை பிறப்பித்தார். ஆனால் அருள்மொழி சென்ற படகு கடலில் மூழ்கியது. அருள்மொழிவர்மன் இறந்ததாக பரவிய செய்தியால் நாடு கொந்தளித்தது. பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதற்கு நந்தினியின் சதியே காரணம் என்று ஆதித்த கரிகாலன் வெறி கொண்டு தன் படையுடன் தஞ்சை நோக்கி விரைந்தார்’ என்று கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன் 2, படத்திற்கு அறிமுக உரையில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக பாடகி சுதா ரகுநாதனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

முதல் பாகத்திலும், நடிகர் கமல் ஹாசன் தான் இன்ட்ரோ வீடியோவிற்கு குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!