வெறித்தனம்... சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' மேக்கிங் வீடியோவை வெளிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Published : Apr 22, 2023, 07:48 PM IST
வெறித்தனம்... சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' மேக்கிங் வீடியோவை வெளிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும், 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதியை மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, அறிவித்துள்ளது படக்குழு.  

நடிகர் யோகி பாபுவை வைத்து 'மண்டேலா' படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவர் இயக்கும் இரண்டாவது படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். 'மாவீரன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் 'மாவீரன்' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தில் சுமார் 500 உள்ளூரு கலைஞர்கள் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான 'சீன் ஆ சீன் ஆ' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'மாவீரன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம், மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

நந்தினியின் சதியே காரணம்..! கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' இன்ட்ரோ வீடியோ!

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்திராத மிகவும் எதார்த்தமான கதாபாத்திரத்தில், ஆழமான கருத்துடன் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில், நடிகர் யோகி பாபு, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, விரைவில் ரிலீசுக்கு தயாராகியுள்ள, இப்படத்தின் மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்து, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. அதன்படி 'மாவீரன்' திரைப்படம் உலகம் முழுவதும், ஆகஸ்ட் 11ஆம் தேதி, 2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாடகி சுதா ரகுநாதனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

'மாவீரன்' படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பிலோமினா ராஜ் இப்படத்திற்கும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!