நண்பர் மேல் பாசம்.. மகளுக்கு ரஜினி என்று பெயரிட்ட நடிகர் - விஷ்ணு விஷாலுக்கும் அவருக்கும் என்ன உறவு தெரியுமா?

Ansgar R |  
Published : Feb 06, 2024, 05:35 PM IST
நண்பர் மேல் பாசம்.. மகளுக்கு ரஜினி என்று பெயரிட்ட நடிகர் - விஷ்ணு விஷாலுக்கும் அவருக்கும் என்ன உறவு தெரியுமா?

சுருக்கம்

Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையுலகிற்குள்ளும், அதற்கு வெளியேயும் பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களோடு இன்றளவும் அவர் நல்ல உறவை பேணி வருகின்றார் ரஜினிகாந்த்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்று வரும் நடிகரும், இயக்குநரும் தான் கே. நட்ராஜ் இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "மூன்று முடிச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் களம் இறங்கினார். 

அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான "பைரவி", "பிரியா", "ராணுவ வீரன்"மற்றும் "நான் மகான் அல்ல" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கதாநாயகன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான "லிங்கா" திரைப்படத்தில் இவர் அவரோடு இணைந்து நடித்திருந்தார். 

இனி அந்த மாதிரி சப்ஜெக்ட்டுக்கு "நோ" தான்.. பளிச்சென்று சொன்ன நந்திதா - அடுத்து அவர் மூவ் என்ன தெரியுமா?

அதே போல சூப்பர் ஸ்டாரின் அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் வள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியதும் நட்ராஜ் தான். சின்னத்திரையிலும் பல நாடகங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த நடராஜ் அவர்களுக்கு ஒரு மகள் உண்டு அவர் பெயர் ரஜினி நட்ராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது பாலிய சிநேகிதன் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயரை தான் தனது மகளுக்கும் அவர் சூட்டினார்.

ரஜினி நட்ராஜ் வேறு யாரும் அல்ல, கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்தான் அவர். அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லால் சலாம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஷ்ணு விஷால் அவர்கள் மேடை ஏறி பேசும் பொழுது தனது மகனின் தாயிடம் கேட்டு தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்ததாக கூறியுள்ளார். 

Metti Oli 2: வந்துடுச்சு 'மெட்டி ஒலி' 2 அப்டேட்! இயக்குனர் திருமுருகன் முடிவால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ