விஜய் பிடிக்கும்... அதற்காக அவருக்கு ஓட்டு போட முடியாது - ரீல் ‘MGR’ அரவிந்த் சாமி கொடுத்த வியத்தகு விளக்கம்

By Ganesh A  |  First Published Feb 6, 2024, 10:52 AM IST

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அவரைப்பற்றி அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற 2026-ம் அண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள விஜய், இனி தான் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்து உள்ளார். விஜய்யின் அரசியல் எண்ட்ரியால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர்களின் அரசியல் பற்றி நடிகர் அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “நான் ரஜினி, கமல் அவர்களின் பெரிய ரசிகன், விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதற்காக அவர்களுக்கு நான் ஓட்டு போட மாட்டேன். ஓட்டு போட கூடாதுனு நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் விஷயத்தில் ஏதேனும் மாற்றம் நிகழப்போகிறதா, உங்களால் அது முடியுமா என்பதும் உங்கள் எண்ணங்கள், நோக்கம் ஆகியவை முதலில் எனக்கு ரீச் ஆக வேண்டும்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா? உதயநிதி ஸ்டாலின் என்ன இப்படி சொல்லிருக்காரு

இவர்களெல்லாம் பெரிய நடிகர்களாக இருக்கலாம், ஆனால் இவங்களால் அரசு திட்டங்களை வகுத்திட என்ன தகுதி இருக்கிறது என நான் எப்படி நம்புவது. இவ்ளோ நாள் ஹீரோவாக சினிமாவில் செய்ததை நிஜத்தில் செய்யப்போகிறேன் என்கிற மன நிலையில் நீங்கள் வந்திருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கும், அரசு திட்டங்களை வகுப்பதற்கும் நீங்கள் எப்படி தயாராகி இருக்கிறீர்கள். உங்களால் பண்ண முடியாதுனு நான் சொல்லவில்லை. பண்ண முடியும் ஆனால் இதையெல்லாம் யோசிக்க வேண்டும்” என அரவிந்த் சாமி பேசியுள்ள இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Well said👏👏
Hope TVK will make a big impact to the people of TN🤞 pic.twitter.com/hdx9dkvk3o

— AmuthaBharathi (@CinemaWithAB)

இதையும் படியுங்கள்... தளபதியின் GOAT பட ஷூட்டிங்.. ரசிகர்களோடு Selfie எடுத்துக்கொண்ட விஜய் - 2 மணிநேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!

click me!