
வெள்ளித்திரை திரைப்படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு சின்னத்திரைக்கும் இருந்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை. அதேபோலத்தான் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருக்கும் அதே அளவிலான வரவேற்பு, சின்னத்திரை நடிகர்களுக்கும் உண்டு என்கின்ற உண்மை, அந்த வகையில் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு பல லட்சக்கணக்கான விசிறிகள் உள்ளனர்.
மேலும் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாலம் உள்ளது. அண்மையில் அந்த சீரியலின் தூணாக விளங்கி வந்த பிரபல நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்குப் பிறகு அவர் ஏற்று நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்தை பிரபல வெள்ளித்திரை நடிகர் வேல ராமமூர்த்தி சிறப்பாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அந்த சீரியலில் ஜனனியின் தோழியாக நடித்து வரும் வாசுவிற்கு (வைஷ்ணவி) கடந்த 2ம் தேதி பிறந்தநாள் வந்த நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒட்டுமொத்த எதிர்நீச்சல் டீம், வைஷாலியின் வீட்டிற்கு சென்று ஒரு சிறப்பு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பெரும் பைரலாக பரவி வருகின்றது.
முதலில் அவர் வீட்டுக்கு சென்ற எதிர்நீச்சல் குழு, பிறகு அவரை கடற்கரைக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு கேக் வெட்டி மகிழ்ந்தனர். எதிர்நீச்சல் டீம் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு பரிமாறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.