லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியாகும் நேரம் மாற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்.. லைகா நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் உருவான மிஷன் சாப்டர் ஒன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ததால் 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5, மாலை ஐந்து மணி அளவில் வெளியாகும் என பட குழு தெரிவித்தது. எனவே ரசிகர்கள் ஆவலோடு படத்தின் டிரைலரை வரவேற்க காத்திருந்த நிலையில்... தற்போது லைக்கா நிறுவனம் இந்த படத்தின் டிரைலர் மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த தகவல் ட்ரைலரை பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
இந்த படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த வித்தியாசமான கதாபாத்திரத்தை காண ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். மேலும் செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.