Actress Kasthuri : பிரபல நடிகர் விஜய் அவர்களுடைய அரசியல் வருகை குறித்து பல திரைத்துறை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது "தமிழக வெற்றி கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தான் ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு, தன் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, திமுகவின் உதயநிதி உள்ளிட்டோர் தங்கள் வரவேற்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி மகள் இயக்கும் அடுத்த படம்.. கதையின் நாயகனாகும் அவருடைய "சிஷ்யன்" - தயாரிக்கபோது யார் தெரியுமா?
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த நடிகை கஸ்தூரி அவர்கள், தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை உள்ளவர்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள், அவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள். அதேபோல மைனாரிட்டி மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று சில விஷயங்களை பேசி இருந்தார்.
விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா? https://t.co/PU5JzxokBi
— Kasturi (@KasthuriShankar)இதில் அவர் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்விட்டர் பயனர் ஒருவர் அவருடைய அந்த கருத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியிருந்த கஸ்தூரி அவர்கள் "விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?" என்று கூறியுள்ளார்.