
தமிழில் 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆர்யா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான 'ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், வட்டாரம், நான் கடவுள், என தன்னுடைய திரைப்படங்களின் தேர்வில் வித்யாசம் காட்டிய ஆர்யா... கதாபாத்திரத்திற்காக அதிக எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் ஆர்யா அந்த படத்திற்காக பட்ட கஷ்டமும், உடலை ஏற்றி இறக்கி நடித்ததும் தான். இதைத்தொடர்ந்து மீண்டும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும்... மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.
மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக தற்போது கடும் உடற்பயிற்சி செய்து உடலை செம்ம ஃபிட்டாக மாற்றி வரும் ஆர்யாவின் வீடியோ ஒன்று வெளியாகி... பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது. இந்த படத்தை 'எஃப் ஐ ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், அனகா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தாமஸ் இசையமைக்க தன்வீர் நீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.