
81 வயதாகும், நடிகரும், தயாரிப்பாளருமான துவாரகிஷ், கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக இறந்ததாக அவரின் மகன் தெரிவித்தார்.
எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள, வீட்டில் துவாரகிஷ் இருந்ததை தொடர்ந்து... அவரின் உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவராகேஷின் மறைவுக்கு கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பரின் நினைவாக போட்டுள்ள பதிவில், 'எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.. காமெடி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தி பிடித்தவர்.. இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன..அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அன்புகள் என கூறியுள்ளார்..
Actor Dwarakish Death: ரஜினி படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!
துவாரகேஷ், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' படத்தை தயாரித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை என்கிற படத்தை, இயக்கி தயாரித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.