மீண்டும் Thug Life படத்தில் இணைந்த JR & DQ.. தேர்தலால் தலைவலியுடன் சுற்றும் மணிரத்னம் - என்ன தான் நடக்குது?

Ansgar R |  
Published : Apr 16, 2024, 09:19 AM IST
மீண்டும் Thug Life படத்தில் இணைந்த JR & DQ.. தேர்தலால் தலைவலியுடன் சுற்றும் மணிரத்னம் - என்ன தான் நடக்குது?

சுருக்கம்

Kamal Haasan Thug Life : நாயகன் திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணையும் திரைப்படம் தான் Thug Life.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் இந்த ஆண்டு துவக்கத்தில் தொடங்கியது. முற்றிலும் மாறுபட்டு ஒரு கதை களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் முன்னணி தமிழ் கோலிவுட் ஹீரோ ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்தனர். 

ஆனால் படப்பிடிப்புக்கான கால அவகாசம் நீண்டு கொண்டே இருந்த காரணத்தினாலும், துல்கர் சல்மான் ஏற்கனவே கால் சீட் கொடுத்திருந்த படங்களை முடிக்க வேண்டியது இருந்ததன் அவசியத்தின் காரணமாக முதலில் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து விலகினார், அவரை தொடர்ந்து ஜெயம் ரவி அவர்களும் இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார். 

கிரீன் சிக்னல் கொடுத்த பிரேமலதா.. மாஸ் Tribute கொடுக்க காத்திருக்கும் தளபதி விஜய் - GOAT பட புது அப்டேட்!

இந்த சூழலில் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு இந்த படத்தில் இணைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே அவர் நடித்து வரும் STR 48 பட பணிகள், Thug Life பட பணிகள் முடிந்த பிறகு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது திமுகவோடு இணைந்து தேர்தல் களத்தை சந்தித்து வருவதால் அவருடைய கால் சீட் கிடைக்காமல் பெரும் தலைவலிகளை சந்தித்து வருகின்றார் இயக்குனர் மணிரத்னம். 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் மீண்டும் Thug Life பட பணிகளில் இனிய உள்ளதாகவும், STR அவர்களும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், சைபீரியா நாட்டில் ஜெயம் ரவி, கமல்ஹாசன், துல்கர் சல்மான் மற்றும் திரிஷா ஆகிய நால்வரும் ஒன்று கூடும் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தேர்தல் முடிந்த அடுத்த நாளே படக்குழு சைபீரியா நாட்டிற்கு புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் படத்தில் இருந்து விலகிய இரு முன்னணி நடிகைகள் மீண்டும் படத்தில் இணைந்துள்ளது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Vishal : என் படம் எப்ப ரிலீஸ் ஆகனும்னு முடிவு பண்றதுக்கு நீ யாரு? ரெட் ஜெயண்ட்ஸை பொளந்துகட்டிய நடிகர் விஷால்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!