கிரீன் சிக்னல் கொடுத்த பிரேமலதா.. மாஸ் Tribute கொடுக்க காத்திருக்கும் தளபதி விஜய் - GOAT பட புது அப்டேட்!

Ansgar R |  
Published : Apr 16, 2024, 08:25 AM IST
கிரீன் சிக்னல் கொடுத்த பிரேமலதா.. மாஸ் Tribute கொடுக்க காத்திருக்கும் தளபதி விஜய் - GOAT பட புது அப்டேட்!

சுருக்கம்

Thalapathy Vijay : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் The Greatest of All Time. விறுவிறுப்பாக இப்பட பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் "The Greatest of All Time". இது தளபதி விஜயின் 68வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் பிறகு தனது 69வது திரைப்படத்தில் நடிக்கும் விஜய், அதன் பிறகு திரையுலகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழு நேர அரசியல் ஈடுபட உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் தனது தமிழக வெற்றிக்கழகம் சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார் தளபதி விஜய். இந்நிலையில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், நடிகைகளான பிரபுதேவா, பிரசாந்த், லைலா சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர். 

Dhanush Vs Aishwarya Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.!

இந்த சூழலில் தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின்படி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருந்த நிலையில், கேப்டனின் மனைவி பிரேமலதா அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இது சம்பந்தமாக ஏற்கனவே வெங்கட் பிரபு பிரேமலதாவை சந்தித்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு தளபதி விஜய் அவர்களும் பிரேமலதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் தனது தம்பி விஜய்க்காக இந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. 

உண்மையில் தன்னை வளர்த்துவிட்ட ஒரு மாபெரும் கலைஞனுக்கு, இப்பொது புகழின் உச்சியில் உள்ள ஒரு சிறந்த நடிகர் இதைவிட பெரிய அளவில் அஞ்சலி செலுத்த முடியாது. இந்த செய்தி வெளியான பிறகு, GOAT படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்.. அருண் விஜய் அக்காவுக்கு வயசே ஆகாதா..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!