Actor Dwarakish Death: ரஜினி படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Published : Apr 16, 2024, 01:36 PM IST
Actor Dwarakish Death: ரஜினி படங்களை தயாரித்த நடிகர்  துவாரகிஷ் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

சுருக்கம்

கன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகரான துவாரகிஷ் கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 81. 

Priya Bhavani Shankar: வெள்ளை நிற சேலையில்... சைடு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! நயன்தாரா போல இருக்காங்களே

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள, வீட்டில் துவாரகிஷ் இறந்ததாக அவரது மகன் கூறியுள்ளார். இவர் நடிகர் என்பதை தாண்டி, பல வெற்றி படங்களை இயக்கியவர். அதே போல் சில படங்களை தயாரித்தும், உள்ளார். இவரின் இறுதி சடங்கு பெங்களூரு ரவீந்திர கலாக்ஷேத்ராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளநிலையில், இவரின் உடல் ரசிகர்கள், குடும்பத்தினர், மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Dharshana Marriage: பிரபல சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு திருமணம் முடிந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' படத்தை தயாரித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை என்கிற படத்தை, இயக்கி தயாரித்துள்ளார். ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர்களின் ஒருவரான இவரது மறைவு ரஜினிகாந்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார் நடிப்பில், வெளியான ஆயுஷ்மான்பாவ என்கிற படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!