சலாம் ‘மொய்தீன் பாய்’... மகள் படத்திற்காக மாஸ் கெட்-அப்பில் ரஜினி - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

By Ganesh A  |  First Published Jun 1, 2023, 5:23 PM IST

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் ஆக நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த், அந்த கெட்-அப்பில் மாஸ் ஆக நடந்து வந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் நடிக்கிறார். இதில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி சம்பந்தமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார்.

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அடுத்தகட்டமாக ரஜினி நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா. ரஜினி நடிக்கும் மொய்தீன் பாய் செம்ம மாஸ் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

Latest Videos

இதையும் படியுங்கள்... கண்ணே பட்டுடும்.. அவ்வளவு அழகு! விஜய் டிவி தீனா - பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்! வைரலாகும் கிளிக்ஸ்!

அந்த வகையில் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கெட் அப்பில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி ஸ்டைலாக நடந்து செல்லும் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

லால் சலாம் மொய்தீன் பாய் கெட்டப்பில் ஸ்டைலாக நடந்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் pic.twitter.com/6ZrVG8cdGE

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை இன்னும் சில மாதங்களில் முடித்து இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்து முடித்த பின்னர் த.செ.ஞானவேல் இயக்க உள்ள தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... விஷ்ணுகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படிப்பட்டவர்? சம்யுக்தா பிரச்சனைக்கு நடுவே வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை!

click me!