
திரையுலகில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதனை யாரும் வெளிப்படையாக பேசுவது இல்லை. பலர் இதுபோன்ற விஷயங்களை கண்டும் காணாமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்துளள்னர். ஆனால் காதல் சுகுமார், நடிகைகளிடம் கேட்கப்படும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து படு ஓப்பனாக பேசியுள்ளார்.
காதல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சுகுமார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுகுமார் காதல் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அவரால் காமெடி நடிகராக ஜொலிக்க முடியவில்லை. நடிப்பை தாண்டி திரைப்படங்கள் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அட்ரா சக்க... நாளை விஜய் டிவி பிரபலம் KPY தீனாவுக்கு திருமணம்! மணமகள் யார் தெரியுமா?
இந்நிலையில், இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் சிலர் பேச தயங்கும் விஷயங்களை ஓப்பனாக பேசியுள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, "நானும் சிம்புவும், இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக தான் இருக்கிறோம். ஆனால் ஒரு பிரபலத்தை வைத்து வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்ததில்லை. ஆனால் கூல் சுரேஷ் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார் என போட்டு தாக்கியுள்ளார்.
அதேபோல் சினிமாவில் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால், அவர்களால் நடிக்க முடியாது என்பதை ஓப்பனாகவே பேசி உள்ளார். அதே போல் இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைக்காத வரை நல்லவர்களாக தான் நடிப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தில் நாம் இருந்து நடிக்க வேண்டும் என்றால் இருக்கலாம் தேவை இல்லை என்றால் ஒதுக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் என மிகவும் எதார்த்தமான பேசியுள்ளார். குறிப்பா சுமார் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ள தகவல் மிகவும் பரபரப்பாக பார்ப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.