கேன்சர் நோயாளிகளுக்காக விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு! இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் இதுவா?

Published : May 31, 2023, 11:39 PM IST
கேன்சர் நோயாளிகளுக்காக விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு! இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் இதுவா?

சுருக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி கேன்சர் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ள தகவல், அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.  

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும், தன்னுடைய பணியை துவங்கி பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என தன்னுடைய திறமைகளை மெருகேற்றி கொண்டது மட்டும் இன்றி, தன்னுடைய திறமைகளை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர் விஜய் ஆண்டனி.

இவர் நடித்து கடந்த 2016-ஆம் ஆண்டு, வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 'பிச்சைக்காரன் 2' படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். இந்த திரைப்படம், மே மாதம் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆகிய இரு மொழிகளில் வெளியான நிலையில்... ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது.

50 வயதை தாண்டியும்... திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகைகள்!

குறிப்பாக தமிழை விட தெலுங்கில், விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து. வசூலிலும் வாரி குவித்தது. ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம். சுமார் ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், இப்படத்தின் வெற்றியை ஏழை - எளிய மக்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், உதவி செய்து கொண்டாடி வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் கடந்த வாரம் திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்கள் பலருக்கு, செருப்பு, போர்வை, உணவு, கைவிசிறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விஜய் ஆண்டனி, அதன் பின்னர் பட்டினி தினத்தை முன்னிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களுக்கு, பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவளித்தார்.  இந்த இரண்டு செயல்களுமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

53 வயதில்... 'மிரியம்மா' படத்தின் மூலம் கதையின் நாயகியாக மாறிய 'கடலோர கவிதைகள்' ரேகா!

இதைத்தொடர்ந்து புற்று நோய்க்கு உதவி தேவைப்படுபவர்கள் தன்னை தாராளமாக அழைக்கலாம் என விஜய் ஆண்டனி தெரிவித்துளளார். antibikiligsl@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஜி எஸ் எல் மருத்துவமனை உடன் இணைந்து இலவசமாக சிகிச்சை கொடுக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், புற்றுநோயாளிகள் சிலரை சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி உள்ளார்.

அதிர்ச்சி... சாலை விபத்தில் சிக்கிய 'புஷ்பா 2' படக்குழுவினர்! பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

விஜய் ஆண்டனியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் பிச்சைக்காரன் 2 படத்தின் போது அவர் சந்தித்த சம்பவங்களா? அல்லது 'பிச்சைக்காரன் 2 ' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது, விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சம்பவமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும்... விஜய் ஆண்டனி உதவிகள் செய்வது, பாராட்டத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!