83 வயதில்.. 29 வயது காதலி மூலம் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ள பிரபல நடிகர்!

By manimegalai a  |  First Published May 31, 2023, 4:38 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ, தன்னுடைய 83-வது வயதில் நான்காவது குழந்தையை வரவேற்க உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 


'தி காட்பாதர்' மற்றும் 'ஸ்கார்ஃபேஸ்' ஆகிய படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் மிகவும் பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோ, விரைவில் தன்னுடைய 29 வயது காதலியின் குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.

இவர் தன்னுடைய காதலியும், பிரபல ஹாலிவுட் நடிகையுமான நூர் அல்பல்லா மூலம், விரைவில் தன்னுடைய நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்கிற தகவல் வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நூர் அல்பல்லா 'பில்லி நைட்', 'லிட்டில் டெத்' மற்றும் 'ப்ரோசா நோஸ்ட்ரா' போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!

83 வயதாகும், அல் பசினோ, நூர் அல்பல்லாவுக்கு முன்னதாக ஜான் டர்னட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  ஏற்கனவே இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதை தொடர்ந்து, நடிகர் அல் பசீனோவின் 29 வயதான காதலி நூல் அல்பல்லா என்பவரை காதலித்து வரும் நிலையில், தற்போது 8 மாத கர்ப்பிணியாக அவர் இருப்பபதாகவும் விரைவில் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் நடிகர் உறுதி படுத்தியுள்ளார். 

மன உளைச்சலில் இருக்கிறோம்... என் மகளை விட்டுவிடுங்கள்! கண்ணீர் விடாத குறையாக பேசிய கீர்த்தி சுரேஷின் தந்தை!

சமீபத்தில் காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்த மற்றொரு பிரபல நடிகர் ராபர்ட் டி நீரோ தனது சிறிய வயது காதலி டிபன் சென் மூலம் 7 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பட்டது அல் பசினோ, தன்னுடைய மகளை விட... சிறிய வயது காதலி மூலம் 4-ஆவது குழந்தையை பெற்றுக்கொள்ள தகவல் ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

click me!