நரக வாழ்க்கை... சம்யுக்தா உடனான திருமண முறிவு குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

By Ganesh A  |  First Published May 31, 2023, 3:14 PM IST

சீரியல் நடிகை சம்யுக்தா, தன் மீது கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தும், அந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகை சம்யுக்தாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக அறிவித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் இருவரும் தங்களது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், தான் இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் மற்றும் பேட்டி மூலம் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்யுக்தா உடனான திருமண முறிவு குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பீரியட்ஸ் டைம்ல கூட.. 24 மணிநேரமும் செக்ஸ்; ‘நானும் மனுஷன் தான’ சம்யுக்தாவின் புகாருக்கு விஷ்ணுகாந்த் விளக்கம்

அந்த அறிக்கையில், ஒருவரை நம்பி தனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ள அவர், அதேபோன்று தனக்கு ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை யாரேனும் தகர்க்க நினைத்தால் அதை வென்றுகாட்ட தயங்க மாட்டேன் என சம்யுக்தாவிற்கு சவால்விடும் தொனியில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை வைரலாகி வருகிறது. விஷ்ணுகாந்தின் இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, தாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என நம்பிக்கை அளிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இலங்கையின் சுற்றுலாத்துறை தூதர் ஆகிறாரா சூப்பர்ஸ்டார்?... ரஜினி வீட்டில் நிகழ்ந்த சந்திப்பால் வெடித்த சர்ச்சை

click me!