15 வருஷமா அதே அழகுடன் இருப்பதன் ரகசியம் என்ன? - ரெஜினா பட விழாவில் நடிகை சுனேனா சொன்ன சீக்ரெட்

By Ganesh A  |  First Published May 31, 2023, 1:59 PM IST

நடிகை சுனேனா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.


காதல் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனேனா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள "ரெஜினா" திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் நடைபெற்றது. 

இதில் திரைப்படத்தின் இயக்குனர் டாமின் டி சில்வா மற்றும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான சதீஸ் நாயர், நடிகை சுனேனா உள்ளிட்ட பட குழுவினர் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். 

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சுனேனா ரெஜினா திரைப்படத்திற்காக இரண்டு மாதம் தொடர்ந்து நடித்துள்ளதாகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் நிலையில் தனக்கு இந்த கதை பிடித்திருந்தது எனவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்... ரொம்ப காஸ்ட்லி வில்லனா இருக்காரேப்பா... பிரபாஸுக்கு வில்லனா நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்ட கமல்ஹாசன்?

தான் ஒரு ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் எனவும் நல்ல கதையாக இருந்தால் எந்தவித கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அதே அழகோடு இருப்பதன் ரகசியம் குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு கதைக்கு தகுந்தார்ப்போல் தன்னை மாற்றிக்கொள்வது தான்  என பதிலளித்தார். 

முன்னேற்றம் என்பது கிடைக்க அதிகம் உழைக்க வேண்டும் எனவும் தன்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு தன்னுடைய குடும்பமும் ஒரு காரணம் என குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் இறுதியில் டீசர் விழாவில் நடிகை சுனைனா நடித்து வெளிவந்த மாசிலாமணி திரைப்படத்தின் ஓடி ஓடி விளையாடு பாட்டிற்கு நடனமாடியதுடன் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் உனக்கென நான் எனக்கென நீ என்ற பாடலையும் பாடி அசத்தினர்.

இதையும் படியுங்கள்... பிகினி உடையணிந்து கடற்கரையில் கவர்ச்சி குளியல் போட்ட ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷி - வைரலாகும் வீடியோ

click me!