கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வலிமை பட நாயகி ஹூமா குரேஷி, பிகினி உடையில் கடற்கரையில் குளித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியின் காலா படம் மூலம் அறிமுகமானார். பா.இரஞ்சித் இயக்கிய அப்படத்தில் ரஜினியின் காதலியாக வயதான பெண் வேடத்தில் நடித்திருந்தார் ஹூமா. காலா படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தார் ஹூமா குரேஷி. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
வலிமை படத்திற்கு பின்னர் பாலிவுட்டில் பிசியான ஹூமா குரேஷி, தற்போது அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் உருவாகும் பூஜா மேரி ஜான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். விபாஷா அரவிந்த் இயக்கி உள்ள இப்படத்தில் சீதா ராமம் படத்தின் நாயகி மிருணாள் தாக்கூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... படம் பார்க்காமலேயே விமர்சிப்பதா... கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர்
சமீப காலமாக நடிகை ஹூமா குரேஷி கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் நடத்தி வருவது மட்டுமின்றி, பட விழாக்களுக்கு ஓவர் கிளாமராக உடையணிந்து வந்து அதிர்ச்சி அளிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாவின் தக்ஹட் படத்தின் ப்ரீமியர் ஷோ பார்க்க உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட உடையணிந்து வந்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஹூமா குரேஷி, அந்த விழாவில் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் படு வைரல் ஆகின.
இந்நிலையில், தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகை ஹூமா குரேஷி அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வருவதோடு, அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது கோவாவில் உள்ள கடற்கரையில் நீல நிற பிகினி உடையணிந்து கவர்ச்சி குளியல் போட்டபடி எடுத்த வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரொம்ப காஸ்ட்லி வில்லனா இருக்காரேப்பா... பிரபாஸுக்கு வில்லனா நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்ட கமல்ஹாசன்?