
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதி ராஜா ஹீரோவாக நடித்த 'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகை ரேகா. முதல் படத்திலேயே ஜெனிபர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், இதை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக புன்னகை மன்னன், ராமராஜனுக்கு ஜோடியாக நம்ப ஊரு நல்ல ஊரு, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக. நடித்தார் தமிழ் மட்டும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்த ரேகா, திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.
ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கிய ரேகா... 2002 ஆம் ஆண்டில் இருந்து பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. ரேகா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரியம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில், எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய 52 ஆவது வயதில் மீண்டும் கதையின் நாயகியாக.. அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால், 'மிரியம்மா' படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே.. இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.