
CSK வீரர்களை தொடர்ந்து, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து 'அரபிக் குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்ததுடன் 175 கோடி பட்ஜெட்டின் தயாரான இந்த படம் வசூல் ரீதியாகவும் கடும் சரிவை சந்தித்து வருகிறது
அரபிக் குத்து பாடல்:
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள, பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா இருவரும் இணைந்து நடனம் ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'ஹலமதி அபிபு' பீவர்:
இந்த பாடல் வெளியானது முதலே,எல்லோரும் 'ஹலமதி அபிபு' பீவர் பிடித்து போய் இருக்கின்றனர். . உலக அளவில் ட்ரெண்டான இந்த பாடல் ஒரு மாதத்தில், 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. மேலும், இதன் மூலம் தமிழ் படங்களும் உலக அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
CSK வீரர்கள் நடனம்:
இந்த பாடலை வைத்து பலரும் வீடியோ எடுத்து, அதனை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். சமீபத்தில், டெவன் கான் வெயின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் சென்னை அணி வீரர்கள் அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது
பி.வி. சிந்துவின் ஆட்டம்:
அந்த வரிசையில், தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பேட்மிட்டன் வீராங்கனையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அரபிக் குத்து பாடலுக்கு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.