Vj Archana: ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா நடத்திய போட்டோ ஷூட் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா நடத்திய போட்டோ ஷூட் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
சினிமா நடிகைகைகளை போன்று, சீரியல் நடிகைகளுக்கும் பிரபலம் அடைவது வழக்கம். அந்த வரிசையில், தொகுப்பாளினியான அர்ச்சனா சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும், ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவை திட்டி தீர்க்காத இல்லத்தரசிகளே இல்லை. அந்த அளவிற்கு மக்கள் மனதில் நடிகையாக இடம் பிடித்து விட்டார்.
ஆரம்ப கால பயணம்:
இன்ஜினியரிங் பட்டதாரியான அர்ச்சனா, சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால் இணையத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தனது வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அர்ச்சனா தன்னுடைய குரல் வளத்தால், ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியான அர்ச்சனா..?
இதையடுத்து, விஜய் டிவியில் நீயா நானா ஷோவில் பங்கேற்ற அர்ச்சனாவிற்கு, இன்ஸ்டாகிராம் மூலம் விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில், கலக்கிய பின்னர் அர்ச்சனாவிற்கு இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுமட்டுமன்றி விஜய் டிவியின் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.
கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..?
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கருப்பு நிற உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரது, கொஞ்சம் அரைகுறை ஆடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் போட்டு வருகின்றனர்