T RamaRao : விஜய் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்

By Asianet Tamil cinema  |  First Published Apr 20, 2022, 12:32 PM IST

T RamaRao : வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த டி.ராமாராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. 


தமிழில் விஜய் நடித்த யூத், விக்ரமின் தில் மற்றும் அருள், ஜெயம் ரவி நடித்த உனக்கும் எனக்கும், விஷாலின் மலைக்கோட்டை என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தவர் டி.ராமாராவ். இதுதவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் அமிதாப் பச்சன் உள்பட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை தயாரித்துள்ள இவர், நடிகர் ரஜினிகாந்தை இந்தியில் நடிகராக அறிமுகமாக்கினார்.

ரஜினிகாந்த இந்தியில் அறிமுகமான அந்த கானூன் படத்தை இயக்கியதும் டி.ராமாராவ் தான். 1983-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹேமமாலினி நடித்திருந்தார். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை இயக்கிய டி.ராமாராவ் தமிழில் இதுவரை ஒரு திரைப்படத்தை கூட இயக்கியதில்லை.

Tap to resize

Latest Videos

இவ்வாறு வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த டி.ராமாராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டி.ராமாராவ்வின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பீஸ்ட்ட நான் 4 முறை பார்ப்பேன்... ஆனா மக்கள் ஒருமுறையாச்சும் பாக்குறமாதிரி படம் எடுங்க- விமர்சித்த பிரபல நடிகை

click me!