KGF 2 : திருமண அழைப்பிதழில் ‘கே.ஜி.எஃப் 2’ டயலாக்.... மாப்ள வெறித்தனமான ரசிகனா இருப்பாரு போல..!

Published : Apr 20, 2022, 01:54 PM IST
KGF 2 : திருமண அழைப்பிதழில் ‘கே.ஜி.எஃப் 2’ டயலாக்.... மாப்ள வெறித்தனமான ரசிகனா இருப்பாரு போல..!

சுருக்கம்

KGF 2 : கர்நாடக மாநிலம் பெல்லகாவியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் வயலன்ஸ் என்கிற டயலாக்கை சற்று மாற்றி திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கினர். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும் வில்லனாக சஞ்சய் தத்தும் நடித்திருந்தனர். மேலும் ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் ரிலீசான இப்படம் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களும் முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக சஞ்சய் தத் உடனான மோதலுக்கு பின் யாஷ் பேசும் “Violence...Violence...Violence...I dont like it... I avoid... But Violence likes me... I cant avoid” என்கிற வசனம் மிகவும் பேமஸ் ஆனது. இதை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு வைரல் ஆகின.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லகாவியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் வயலன்ஸ் என்கிற டயலாக்கை சற்று மாற்றி திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பிறந்த ஒரே நாளில் குழந்தைக்கு பெயர்சூட்டிய காஜல் அகர்வால்... பெயர் குட்டியாக இருந்தாலும் கியூட்டாக இருக்கே

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?