
சீரியலில் நாயகியாக நடித்து, பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மால்வின் மல்ஹோத்ரா. இவர் ஹோட்டல் மிலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தயாரிப்பாளர் யோகேஷ் மால்வின் சிங்யிடம் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. திடீர் என யோகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மால்வினை கடந்த ஒரு வருடமாக வற்புறுத்தி வந்துள்ளார்.
நடிப்பில் பிஸியாக இருக்கும் மால்வின் தொடர்ந்து இவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை இரவு 9 மணி அளவில், மால்வின் மல்ஹோத்ரா வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது, அந்தேரியில் அவருடைய காரை வழிமறித்த யோகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். தொடர்ந்து, மால்வின் மறுத்ததால் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். மீண்டும் குத்த முயற்சித்த போது, மாளவில் தடுத்ததால் அவரது கையிலும் கத்தி குத்து பாய்ந்தது.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்போட்டோஸ்!
இதையடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மால்வியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெர்சோவா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுவந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் யோகேஷ்குமார் மகிபால் சிங் பால்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.